Skip to main content

கமலின் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

vikram film first look poster released kamal haasan tweet

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத், ஃபாசில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம்  திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்…" என்று குறிப்பிட்டு அத்துடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

திரைப்பட விருதுகள் விழா; தமிழக அரசு அறிவிப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Film Awards Ceremony; Tamil Govt Announcement

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் வழங்குகிறார். மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது இறுதிச்சுற்று படத்திற்காக ஆர்.மாதவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்காக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் அரவிந்த்சாமி (தனி ஒருவன்), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது - சிங்கம் புலி (அஞ்சுக்கு ஒண்ணு) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதை ஆசிரியர் மோகன் ராஜாவுக்கு (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கும் (தனி ஒருவன்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.