/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamla.jpg)
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத், ஃபாசில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்…" என்று குறிப்பிட்டு அத்துடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)