Vijay's surprise... fans are excited!

Advertisment

நடிகர் விஜய்யின் 'வாரிசு' படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான வெளியீட்டு உரிமை தொடர்பாக, பிரபல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளையும், ரசிகர்களையும் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின் போது, அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸீ ஆனந்த் உடனிருந்தார். பின்னர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, இன்று (20/11/2022) மதியம் பனையூர் அலுவலகத்திற்கு காரில் வந்த விஜய்யைக் காண ஏரளாமானோர் குவிந்திருந்தனர். அவர்களை பார்த்து கையசைத்தப்படி, நடிகர் விஜய் அலுவலகத்துக்கு உள்ளே சென்றார்.

Advertisment

சந்திப்பு பின்னர், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு ருசியான பிரியாணியை மதிய விருந்தாக வழங்கி, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய், தனது மன்றத்தின் நிர்வாகிகளையும், ரசிகர்களையும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.