Skip to main content

விஜயகாந்த் நலம்பெற நாகூர் தர்காவில் கூட்டுப்பிரார்த்தனை

Published on 20/08/2018 | Edited on 20/08/2018
na

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி புகழ் பெற்ற நாகூர் தர்காவில், தேமுதிக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினர்.

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தனது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று சென்னை திரும்பினார்.  அவர் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார்.  இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இன்று தேமுதிக சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற தேமுதிக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் தர்காவில் பிரார்த்தனை செய்த புனித நீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விஜயகாந்தின் சமூக வலைத்தளப் பக்கம் ஹேக்! 

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
vijayakanth faceboook page hacked

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தேமுதிக நிறுவனத் தலைவரராகவும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

இவரது நினைவிடத்தில் 125 நாட்களில் சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளதாக ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. அதனைப் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 9ஆம் தேதி  டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ கையால் பெற்றுக்கொண்டார்.  

இந்த நிலையில் விஜயகாந்தின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரது பக்கத்தில் வழக்கமாக அவருடைய கட்சி தொடர்பான செய்திகளே வெளியாகி வந்த நிலையில் தற்போது சம்மந்தமில்லாத சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“விஜயகாந்திற்கான கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது” - சத்யராஜ்  

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
sathyaraj speech in Mazhai Pidikatha Manithan teaser launch

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்க பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

அப்போது சத்யராஜ் பேசுகையில், “எம்.ஜி.ஆர் மீது எந்தளவு மரியாதையும் அன்பும் நான் வைத்திருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி சார் சினிமாவில் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. ஆனால், அவர் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன பெரியார் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது. அதைப்போல, எனது அருமை நண்பர் விஜயகாந்திற்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது என்னுடைய பாக்கியம். இதற்காக விஜய் ஆண்டனி, தனஞ்செயன், விஜய் மில்டன் மூவருக்கும் நன்றி. நல்லவேளை நான் முடியில்லாமல் பிறந்தேன். இதனால்தான் எனக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. கட்டப்பா கிடைத்ததும் அப்படித்தான். சில மைனஸ்தான் பிளஸ். கடவுளுக்கு என்னைப் பிடிக்கும். ஏனெனில், அவரை நான் டிஸ்டர்ப் செய்வதில்லை. 

எல்லோரையும் போல, ‘என் படம் வெற்றி பெற வேண்டும், தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும்’ என்று கெடுபிடி போட மாட்டேன். மற்றப் படங்களைப் போல அல்லாமல், நிஜமாகவே இந்தப் படம் நன்றாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டிரேட் மார்க் இருப்பதுபோல, எனக்கு இருக்கும் நக்கல் திரையிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதோடு வில்லத்தனம் கலந்து வந்தால் இனி கொள்கையைத் தளர்த்தி வில்லனாக நடிக்கலாம் என்று நினைக்கிறேன். என் நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட பி.வாசு, பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன் என எல்லா இயக்குநர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்” என்றார்.