Skip to main content

'ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்'- தே.மு.தி.க. தலைமை அறிக்கை!

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

'Vijayakanth toe removal' - DMDK Chief Report!

 

தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அக்கட்சியின் தலைமை இன்று (21/06/2022) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். 

 

மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான வதந்திகளைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஏ.ஐ மூலம் விஜயகாந்தைத் திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது” - பிரேமலதா விஜயகாந்த்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 Premalatha Vijayakanth Vijayakanth should not be used in films by AI without permission

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு, மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பலரும் நடிக்க வைப்பதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பலரும் இந்த விஷயத்தை கையில் எடுக்கயிருப்பதாக அவ்வப்போது கூறி வந்தனர். 

இந்த நிலையில், விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அனுமதியின்றி எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘தமிழ் திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே, இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது.

எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வேளியிட வேண்டும். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாகும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடகச் செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Premalatha Vijayakanth meeting with Governor R.N. Ravi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியியைச் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர். “ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும். ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள்.  எனவே அந்த மதுபான ஆலைகளை மூட வேண்டும். நாங்கள் கூறிய கருத்துகளை ஆளுநர் மிகவும் கவனமுடன் கேட்டறிந்தார். போதைப்பொருள் பழக்கம் குறித்து அளுநர் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவரிடம் உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு பக்கம் குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மற்றொருபுரம் மக்கள் உயிரிழக்கிறார்கள். இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது” எனத் தெரிவித்தார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.