vijayakanth

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தருமபுரி மாவட்டம், சிட்லிங் மலைக்கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், கடந்தவாரம் சேலம் மாவட்டத்திலும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்படிருப்பதையும் தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதுபோன்று தொடர்ந்து இந்த சம்பவம்கள் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உச்சதண்டனையான தூக்குதண்டனை கொடுத்தால் தான், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் தடுக்கமுடியும்.

Advertisment

எனவே ஆட்சியாளர்களும், நீதித்துறையினரும் இதை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.