Skip to main content

தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையை விரும்புவார்கள்... கருத்துக் கணிப்பு குறித்து விஜயதாரணி பேட்டி

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
vijayadharani



மக்களவைத் தேர்தல் தொடர்பாக இண்டியா டுடே - கார்வி இன்சைட்ஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், பாஜக கூட்டணி 237 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 166 தொகுதிகளையும், இதர கட்சிகள் 140 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி நியூஸ் - சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் பாஜக கூட்டணி 233 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 167 தொகுதிகளையும், இதர கட்சிகள் 143 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

rahul-modi


இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி, 
 

இந்த கருத்துக் கணிப்புகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அகில இந்திய அளவில் தனிப்பெரும் முதல் கட்சியாக காங்கிரஸ் உருவெடுக்கும். தனிப்பெரும்பாண்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.  
 

கடந்த தேர்தலைவிட அதிக கட்சிகள் உங்கள் கூட்டணியில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதா?
 

தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அகில இந்திய அளவில் அதிகமான கட்சிகள் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைமையில் பெரிய கூட்டணி அமையும். 
 

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் உங்கள் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதா?
 

கூட்டணி தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வோம். வெற்றி பெறுவோம். தேர்தலுக்கு முன்பு எப்படி என்று தெரியவில்லை. தேர்தலுக்கு பிறகு அவர்கள் காங்கிரஸ் தலைமையை விரும்புவார்கள். கண்டிப்பாக ஏற்பார்கள். ஏற்றுத்தான் ஆக வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் ஆட்சி அமைய வாய்ப்பில்லை. இவ்வாறு கூறினார். 




 

 

சார்ந்த செய்திகள்