Vijayabaskar went to the DMK water place and offered refreshments

தமிழ்நாடு முழுவதும் கத்தரி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பகலில் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்களை திறந்து தண்ணீர், சர்பத், மோர், போன்றவற்றுடன்பழங்கள், இளநீர் உள்ளிட்டவைகளையும்வழங்கி வருகின்றனர்.

Advertisment

இதே போல புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் திமுக சார்பில் அமைச்சர் மெய்யநாதன் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். அந்தப் பந்தலில் தொடர்ந்து தண்ணீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்எல்ஏ வருகை தந்திருந்தார். அப்போது தண்ணீர்ப் பந்தலை திறந்து வைத்து அந்தப் பகுதியில் சாலையில் நடந்து சென்றபொதுமக்களுக்கு குளிர் பானங்களை வழங்கி உள்ளார்.

Advertisment

அப்போது, அருகில் இருந்த திமுக தண்ணீர் பந்தலுக்குச் சென்றவிஜயபாஸ்கர் அங்கு தண்ணீர் கொடுக்க நின்ற திமுகவினருக்கும் குளிர்பானங்களை கொடுத்து படம் எடுத்துக் கொண்டார். இப்போது அந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.