Vijay to Panayur, -former senior officer joint in tvk

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்ற தேர்தலுக்கு த.வெ.க.வும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் கடந்த மாதம் (26 மற்றும் 27.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் முழு நேர அரசியலில் விஜய் இறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 2026 தேர்தலை நோக்கி எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வரும் நிலையில் மீதம் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான பட்டியலை இன்று விஜய் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முக்கிய சந்திப்புக்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வர இருக்கும் விஜய், 12 மணியிலிருந்து ஒரு மணிக்குள்ளாக மீதமுள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தவெகவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அணிகளின் தலைமைகள் யார் என்பது குறித்த நிர்வாகிகள் பட்டியலை வெளியிட இருக்கிறார்.

Advertisment

அண்மையில் ஐஆர்எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற அருண்ராஜ் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.