Skip to main content

“மிகுந்த மன வேதனை அடைந்தேன்” - த.வெ.க  தலைவர் விஜய்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Vijay has condoled  lost life of indians in a building fire in Kuwait

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் இந்தத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் என்பவரின் நிலை குறித்தும் தெரியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் அங்குள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலராக பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Vijay has condoled  lost life of indians in a building fire in Kuwait

இந்த நிலையில், நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், “குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

“விஜய் கூறிய விவரங்கள் நெகிழவைத்து” - நித்திலன் சாமிநாதன்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nithilan saminathan about vijay praised his maharaja movie

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. 

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நித்திலன் சாமிநாதன், “டியர் விஜய் அண்ணா, இந்த சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு பெருமையாக உணர்கிறேன். மகாராஜாவைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னைப் நெகிழவைத்தது. அது எனக்கு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. லவ் யூ ணா” என பதிவிட்டுள்ளார்.

Next Story

“பல வருடங்கள் கழித்து சந்திப்பு” - ரம்பா நெகிழ்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
vijay rambha recent clicks

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர் ரம்பா. 2010 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர், கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு குடி பெயர்ந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறது. 

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் ரம்பா. ஆனால் சமீபகாலமாக லைம் லைட்டில் இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் விஜய்யுடன் சந்தித்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார் ரம்பா. தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விஜய்யை சந்திதிருந்த நிலையில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து, “பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்தது மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

vijay rambha recent clicks

விஜய் மற்றும் ரம்பா இருவரும் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தச் சூழலில் விஜய்யுடன் ரம்பா எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.