தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் சிறுவனுடன் போட்டி போட்டுக் கொண்டு சென்ற ஆட்டோ ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று (20/01/20250 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கடையநல்லூர் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்த பொழுது அருகே சிறுவன் ஒருவனும் சைக்கிளில் சென்றுள்ளார். சிறுவனை முந்திக்கொண்டு ஆட்டோ நிலையில் சிறுவனை ஆட்டோ ஓட்டுநர் லேசாக தட்டி விளையாட முயன்றார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி வீட்டின் படிக்கட்டில் கவிழ்ந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.