Skip to main content

கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வந்த சுற்றுலா சோகத்தில் முடிந்தது

Published on 27/02/2019 | Edited on 27/02/2019


வேலூர் மாவட்டம் ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலைக்கு, சென்னை போரூர் பகுதியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர்கள் பிப்ரவரி 26 ந்தேதி காலை சுற்றுலா  வந்தனர். 

k

 

மதியம் சுற்றுலாவை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் வாணியம்பாடி அருகே கலந்தரா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த சிவா, ஜானகிராமன், பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது, ஒவ்வொருவரும் ஒரு உதவி செய்தனர், பலர் வேடிக்கை பார்த்தனர்.

 

d

 

அப்போது வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அரசு விழாவில் கலந்து கொள்ள வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் அதிகாரிகள் அவ்வழியாக காரில் சென்றனர். மக்கள் கூட்டம் பதட்டமாக இருப்பதை பார்த்து காரை நிருத்தி விசாரித்தனர். விபத்து நடந்து இருப்பது அறிந்து உடனடியாக காரில் இருந்து இறங்கி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விபத்தில் மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

துப்புரவுப் பெண் ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபர்! 

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
 person who behaved rudely to the cleaning lady

மதுரை மாநகராட்சி பூங்காவும், விளையாட்டு மைதானமும்  பொன்மேனி –  ஜீவனா ஸ்கூல் எதிரில் உள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி பெண் பணியாளர்கள் துடைப்பத்தால் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது,  அவர்களைப் பொருட்படுத்தாமல், அந்த நபர் செல்போனில் பேசியபடியே சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். 

பெண் ஊழியர்கள் சத்தம்போட்டும், அவர்  காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒருவழியாக முடித்துவிட்டு சாவகாசமாகத்  திரும்பிய அவர், அந்த ஊழியர்களை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார். “நான் 20 வருஷமா இங்க வந்துட்டு இருக்கேன். எப்பவும்போல இன்னைக்கும் போனேன். என்னைச் சத்தம் போடுற அளவுக்கு நீயெல்லாம் ஒரு ஆளா?”  என்று உரத்த குரலில் மிரட்டினார்.

 person who behaved rudely to the cleaning lady
நவீன்

அப்போது, பெண் ஊழியர்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த நவீன் “என்ன சார்.. தப்பும் பண்ணிட்டு சத்தம் போடுறீங்க? பெண்கள் இருக்கிற பக்கம் திரும்பி ஜிப்பை மாட்டுனீங்க. இதெல்லாம் சரியில்ல.” என்று கூற, அந்த நபர் மேலும் எகிற ஆரம்பித்தார். “பூங்காவுக்கு வர்றவங்க இந்த நாற்றத்தைத் தாங்குவாங்களா? துப்புரவு  வேலை பார்க்கிறவங்கன்னா.. இந்தமாதிரி ஆளுங்களுக்கு இளக்காரமா தெரியுது. கொரோனா காலத்துல உசிர மதிக்காம ரிஸ்க் எடுத்து வேலை பார்த்தோம். எங்க அருமை இவங்களுக்கு எங்கே தெரியப்போகுது?” என்று  புலம்பிய முனியம்மா தலையில் அடித்துக்கொண்டார்.

அந்த நபர் யாரென்று விசாரித்தோம். ஜீவனா ஸ்கூல் வேன் டிரைவராம்.  சொந்தமாக நான்கு வாகனங்கள் வைத்து ட்ரிப் அடிக்கிறாராம். கல் பெஞ்சில்  உட்கார்ந்திருந்த அந்த நபரிடம், சட்டத்தின் பார்வையில் நீங்கள்  நடந்துகொண்ட விதம் குற்றச்செயல்’ என்று அழுத்தமாகச் சொன்னோம்.  சுத்தத்தைப் பேணவேண்டிய இடத்தில் அசுத்தம் செய்பவர்கள்  திருந்த வேண்டும். 

Next Story

10 சொகுசு கார்களுடன் சென்ற கண்டெய்னர் லாரி; திடீரென தீபற்றி எரிந்தால் பரபரப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Container lorry carrying 10 luxury cars worth Rs 1.5 crore catches fire midway

1.5 கோடி மதிப்புள்ள 10 சொகுசு கார்களுடன் சென்னை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி நடுவழியில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

பூனே நாக்பூரிலிருந்து  சென்னை நோக்கி 1.5 கோடி மதிப்புள்ள 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. சரியாக வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென லாரியின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி எரியத் துவங்கியது. 

இதனைக் கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் உள்ளே இருந்த கார்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தப்பியது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் வாலாஜாபேட்டை பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.