Skip to main content

தனியார் நிலத்தில் மணல் கொள்ளை! கேள்வி கேட்ட உரிமையாளரை வெட்டிய மணல் மாபியாக்கள்

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிக்கொண்டா, வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு போன்ற பகுதிகளின் வழியாக செல்லும் பாலாற்றில் லாரி, ட்ராக்டர், மாட்டு வண்டி, டூவீலரில் திருட்டு தனமாக மணல் அள்ளுவது வாடிக்கையாக வைத்திருக்கின்றனர் மணல் மாபியாக்கள். இப்படி மணல் திருடுபவர்கள் அரசியல் பிரமுகர்களாகவும், அதிகாரிகளாகவும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

 

s

 

அதோடு, பாலாற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் ஆழமாக பள்ளம் தோண்டி மணல் எடுக்கின்றனர். இதுப்பற்றி கேள்வி கேட்கும் இடத்தின் உரிமையாளரை கடுமையாக மிரட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் மணல் மாபியாக்கள். மிரட்டியவர்கள், தற்போது அடுத்த கட்டமாக கேள்வி கேட்பவரை வெட்டவும் செய்துள்ளனர்.

 

s

 

ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் பாலாற்றங்கரையின் ஓரம் உள்ள விவசாய நிலங்களில் மணல் மாபியாக்கள் மணல் திருடுகின்றனர். மே 16 ந்தேதி காலை தனியார் நிலம் ஒன்றில் மணல் திருட அந்த நிலத்தின் உரிமையாளரின் மேலாளர் சங்கர், அதைப்போய் கேட்டுள்ளார். உடனே மணல் திருட்டுக்கு தலைமை தாங்கிய இருவர் அருவாளால் சங்கரை வெட்ட அவர் கையால் தடுத்துள்ளார். இதனால் அவர் கையில் வெட்டு விழுந்துள்ளது. அவர் அலறி துடித்து சத்தம்போடவும்,  அக்கம்பக்க மக்கள் என்னவோ ஏதோவென ஓடிவர வெட்டியவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து ஆம்பூர் தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் தர, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 

மணல் திருட்டை தடுக்க மே 15ந்தேதி தான் ஏ.டி.எஸ்.பி பாலசுப்பிரமணி தலைமையில் சிறப்பு படையொன்றை வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார் உருவாக்கி அறிவித்தார். மணல் திருட்டை தடுக்க இரண்டு சிறப்பு படைகள் உள்ள நிலையில், மணல் மாபியாக்கள் தைரியமாக கேள்வி கேட்டவரை வெட்டியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.  


 

சார்ந்த செய்திகள்