தமிழகத்திலும்கரோனாபரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழகப்பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த 10 மாதங்களில் மட்டும் திருடப்பட்ட மற்றும் காணாமல்போன4,000- க்கும் மேற்பட்ட செல்ஃபோன்களைமீட்டுள்ள தமிழக போலீசார் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டசென்னை காவல் ஆணையர் ''10 மாதங்களில் மட்டும் திருடப்பட்ட, காணாமல்போன 4,000-க்கும் மேற்பட்ட செல்ஃபோன்களைஉரியவர்களிடம்ஒப்படைத்துள்ளோம். சென்னை காவல்துறைக்குஎந்தப் புகார் வந்தாலும் உடனேவிசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேர ஊரடங்கைமீறி வெளியே செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.சென்னையில் மட்டும் இரவு நேர ஊரடங்கிற்கு2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

Advertisment