The vehicle of disabled persons in the accident..

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாற்று திறனாளிகள் உரிமைக்கான இயக்கம் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் இருந்து ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

Advertisment

இவர்களது வேன், திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே முன்னாள் சென்ற லாரி மீதுமோதி விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்த 14 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, விபத்தில் காயம் அடைந்த மாற்றுத்திறனாளிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment