Skip to main content

ரூ.29 கோடி செலவில் காய்கறி சந்தை விரிவாக்கம்; முழுவீச்சில் நடக்கும் பணிகள்!

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

Vegetable market expansion at a cost of Rs.29 crore

 

தென்னிந்தியாவிலேயே இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட்டாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் திகழ்கிறது.

 

காந்தி காய்கறி மார்க்கெட் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் அதிகளவில் தாங்கள் விளைவித்த காய்கறிகளை ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்கெட்டிற்கு கொண்டு வந்து விலை நிர்ணயம் செய்து விற்பது வாடிக்கை.

 

இங்கிருந்து காய்கறிகள் தினமும் சுமார் 1000 டன் அளவில் தமிழ்நாடு உட்பட கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புனே, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, அதன்மூலம் தினமும் சுமார் ரூ.5 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தற்போது பெருகி வரும் நவீனக் காலத்திற்கு ஏற்ப கட்டிடம் விரிவாக்கம் செய்வதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் தீவிர முயற்சியால் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் ரூ.29 கோடி செலவில் இந்த சந்தை நவீனமயமாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

 

இதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டு, தற்போது அதிநவீன வசதிகளுடன் வியாபாரிகளுக்கான கடைகள், உணவகம், போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வாகனங்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழி, வாகனம் நிறுத்துமிடம், வங்கி சேவை, ஏ.டி.எம். மையம், காவல் உதவி மையம், நிழற்குடை, குடிநீர் சேவை, மழைநீர் வாய்க்கால், கழிப்பறை வசதி, வெளியூரிலிருந்து வந்து செல்லும் விவசாயிகள் தங்கிச் செல்வதற்காகத் தங்கும் விடுதிகள், தடையில்லா மின்சார வசதி, அன்றாட சேகரமாகும் மார்க்கெட் குப்பைகளை நவீன எந்திரங்கள் வசதியுடன் தினமும் சுத்தம் செய்யும் வசதி உள்ளிட்ட அம்சங்களோடு தற்போது மார்க்கெட்டுக்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

10 மணி வரை மழை; நான்கு மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Rain till 10 p.m.; Alert for four districts

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10 மணி வரை சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அலைக்கழிக்கும் அதிகாரிகள்? - பத்திரப்பதிவு அலுவலகத்தில் தர்ணா போராட்டம்! 

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Owners of  and sitting on the floor in the deed office and dharna Struggle

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் முன்பு நிலத்தின் உரிமையாளர்கள் தரையில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தேனி மாவட்டம் காமக்காப்பட்டியைச் சேர்ந்த விவசாயி  துரைசிங்கம் குடும்பத்தினர் தங்கள் வசம் வைத்திருந்த 90 சென்ட் விவசாய நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்வதற்கு பதிவாளர் அலுவலகம் வந்துள்ளனர். ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள நிலங்கள் விவசாய நிலமாக பதிவு  செய்யப்பட்டிருந்த நிலையில்  தற்போது பதிவாளர் அலுவலகத்தில் துரைசிங்கம் நிலத்தை விவசாய நிலமாக பதிவு செய்ய முடியாது என்றும் சதுரடி நிலமாகத்தான்  பதிவு செய்வோம் என்றும் கூறப்பட்டுள்ளது. தாங்கள் வைத்திருப்பது விவசாய நிலம்தான் என்று துரைசிங்கம் குடும்பத்தினர் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்த போதிலும் கடந்த 45 நாட்களாக பத்திரம் பதிவு செய்யப்படாமல்  அலைக்கழிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த  துரைசிங்கம் குடும்பத்தினர் இன்று சார்பதிவாளர் முன்பு பத்திரத்தை பதிவு செய்ய வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வத்தலக்குண்டு போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். வத்தலக்குண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வில்லங்கச்  சான்று, பிறப்புச் சான்று மற்றும் பல்வேறு சான்றுகளை வழங்குவதற்கு நாள்தோறும் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாகி உள்ளது. எனவே வத்தலகுண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடு மற்றும் குற்றச்சாட்டுகள்  தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.