Skip to main content

கிராம உதவியாளராக நியமிக்காததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! -தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

கிராம உதவியாளராக நியமிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

vao officer dharmapuri collector chennai high court


தர்மபுரி மாவட்டம்- பாலக்கோடு வட்டத்தில் கிராம உதவியாளராகத் தன்னை நியமிக்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர், கடந்த 2007- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், அவரை கிராம உதவியாளராக நியமிக்கும்படி, தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிக்கு கடந்த 2007- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமல்படுத்தாததால், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக துரைராஜ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில், 2019- ஆம் ஆண்டு வரை பாலக்கோடு பகுதியில் கிராம உதவியாளர் பதவிக்கு யாரும் நியமிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

vao officer dharmapuri collector chennai high court

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், 4 வார காலத்திற்குள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.



 

சார்ந்த செய்திகள்