Skip to main content

தக்காளி ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து - தமிழக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

 A van carrying tomatoes overturned in an accident - Tamil Nadu border traffic damage

 

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மிகவும் ஆபத்தான மலைப்பகுதி ஆகும். தமிழகம், கர்நாடகா இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

 

இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனால் திம்பம் மலைப் பகுதியில் 16 டன் அளவு கொண்ட வாகனம் மட்டுமே அனுமதித்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை  8வது கொண்டை ஊசி வளைவில் தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதில் தன்வாய்ப்பாக ஓட்டுநர் தன்ராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.  வாகனம் கொண்டை ஊசி வளைவிலேயே கவிழ்ந்து விழுந்ததால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடர்ந்த வனப் பகுதியில் இரவு 9 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு பண்ணாரி சோதனைச் சாவடிக்கு தகவல் தெரிவித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் தக்காளி பாரத்தை வேறு வண்டிக்கு மாற்றம் செய்து கவிழ்ந்து கிடந்த வேனை  ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் 6 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது. சரக்கு வேனில் நான்கு டன் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததால் கொண்டை ஊசி வளைவில் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்தது தெரிய வந்தது. எனவே சிறிய ரக வாகனங்களுக்கும் பாரம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சேறும், சகதியுமான சாலை; சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

People struggle to repair the mud and muddy road

 

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர், கே.கே. நகர், பனந்தோப்பு ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகரில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்கு, சாலை வசதி, மழைநீா் வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், இதுதொடா்பாக பலமுறை வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கும் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் குடியிருப்புக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும், நடந்து செல்லும் பலரும் சாலையில் வழுக்கி விழுந்து காயமடைவதும் எனத் தொடர்கதையாக ஆகிறது.

 

இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய சாலையில் சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலை அமைத்துத் தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்