மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இந்தியாவை ரத்தக் களறியாக்க விஸ்வ இந்து பரிஷத்தும், சிவசேனாவும் முடிவெடுத்துவிட்டன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று அறிவித்துவிட்டார்கள். விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா சக்திகள் இந்த உபகண்டத்தினுடைய பன்முகத்தண்மையை சிதைத்து ஆர்.எஸ்.எஸ். தேசமாக ஆக்க முயற்சிப்பதால் ரத்தக் கரைப்படிந்த சிவப்பு கோடுகளால் இந்திய வரைபடம் கிழிப்பட்டுப்போகும் என்று எச்சரிக்கிறேன்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி அல்ல, அவர்கள் நிதின் கட்கரியை பிரதமராக்கப்போவதாக செய்திகள் வந்திருக்கிறது. பாஜக அரசு வரக்கூடாது. வராது. மாநில கட்சிகளும் காங்கிரசும் இணைந்த கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் கூட்டாட்சித்தத்துவம் காப்பாற்றப்படும். அதன் மூலம் இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்படும். இவ்வாறு கூறினார்.