
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் மறைவையொட்டி பரோலில் தஞ்சை வந்து தங்கியுள்ள சசிகலாவை பல அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் உறவினர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி வருகின்றனர். அந்த வகையில், விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, நடிகையும் முன்னாள் எம்பியுமான விஜயசாந்தி மற்றும் பலர் வந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று தஞ்சை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடராஜன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நடராஜன் என் இனிய நண்பர் என்றார். தொடர்ந்து அருளானந்தம் நகரில் சசிகலா தங்கியுள்ள வீட்டிற்கு சென்று சசிகலாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினார். இ்ந்த சந்திப்பின் போது டிடிவி தினகரன் உடனிருந்தார். சந்திப்பு முடிந்து வெளியே வந்த வைகோவை டிடிவி தினகரன் கார் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்.