Published on 11/09/2019 | Edited on 11/09/2019
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி மாநிலங்களவை எம்பி வைகோ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
முன்னாள் காஷ்மீர் பிரதமர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
![Vaiko case to find Farooq Abdullah!](http://image.nakkheeran.in/cdn/farfuture/h4Nr4YqNdOwBKnNNIvpVozCoQebqcBVFofxUCinHZAQ/1568182093/sites/default/files/inline-images/zzzasasas.jpg)
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. வரும் 15 ஆம் தேதி சென்னையில் நடக்கும் மாநாட்டிற்கு முக்கிய தலைவர்களை அழைக்க திட்டமிட்டுள்ள நிலையில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்து அழைப்பிதழ் தர முயன்றும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. எனவே அவரை கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.