Skip to main content

வாச்சாத்தி கொடூரம்; இன்று தீர்ப்பு

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

 Vachathi incident; Judgment today

 

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992 ஆம் ஆண்டு வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 4 இந்திய வனப் பணியைச் (IFS) சேர்ந்த அதிகாரிகள் உள்பட 269 பேர் மீது பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் விசாரணை நடந்த காலகட்டத்திலேயே வழக்கில் சம்பந்தப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை விசாரணை நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு தண்டனை வழங்கி இருந்தது. இதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட  17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டது. இதில் தண்டனை பெற்றவர்கள், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

அப்போது இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், வாச்சாத்தி மலைக் கிராமத்திற்கு நேரில் சென்றும் விசாரணை செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் வாச்சாத்தி மலைக்கிராம மக்கள் மீதான வன்கொடுமை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று 29 ஆம் தேதி (29.09.2023) தீர்ப்பளிக்க உள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவர்; சுற்றிவளைத்த வனத்துறை!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Two people were arrested for roaming around in the forest

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நரசிங்கபுரம் காப்புகாடு நீலிகொல்லி வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் வன அலுவலர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நீலிக்கொல்லி வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த பூங்குளம் பகுதியை சேர்ந்த சேட்டு மற்றும் மிட்டூர் அடுத்த மல்லாண்டியூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில், இருவரும் வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, மற்றும் ஹெட் லைட் மருந்து, இரும்பு கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Next Story

'410 ஆசிரியர்களுக்குப் பணி வழங்குக' - நீதிமன்றம் உத்தரவு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
'Give employment to 410 teachers'- court orders

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டி தேர்வை எதிர்த்து 410 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடைந்த நிலையில் 10 ஆண்டுகளாக 410 ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக காத்திருந்து வருகின்றனர். தகுதித் தேர்வு எழுதி பணி நியமனத்திற்கு காத்திருக்கும் நேரத்தில் 2018 ஆம் ஆண்டு போட்டி தேர்வை அரசு கொண்டு வந்ததால்  பணி நியமனம் இல்லாமல் காத்திருக்கும் ஆசிரியர்கள் 410 தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ள நீதிபதி மகாதேவன் அமர்வுக்கு முன்பு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போட்டித் தேர்வு என்பது 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு அதற்கு முன்னதாகவே மனுதாரர் 410 பேரும் மாநில அரசின் திட்டத்தின் படிதகுதித் தேர்வு எழுதியுள்ளனர். எனவே 410 பேருக்கும் தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.