Skip to main content

நந்தனத்தில் நடைபெற்றுவரும் மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்! (படங்கள்)

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

தமிழ்நாட்டில் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசின் சார்பிலும், மருத்துவர்கள் தரப்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பலரது மத்தியிலும் அச்சம் இருந்துவந்த நிலையில், தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது.

 

மேலும், கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டது. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. இதனை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் துவக்கிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்?; தொடரும் இந்திய மாணவர்களின் மர்ம மரணம்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Continued incident on Indian students in America

அமெரிக்க நாட்டில் படிக்கும் இந்தியர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ படித்து வந்த இந்தியரான விவேக் சைனி (25) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மர்ம நபர் ஒருவரால் கொடூரமான முறையில் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து, இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியரான அகுல் பி. தவான் (18) அதே மாதத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பர்டியூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியரான நீல் ஆச்சார்யா காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவரைப் போலீசார் தேடி வந்தனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் மஜாகீர் அலி என்ற ஐ.டி. மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கடந்த 4 ஆம் தேதி மர்ம நபர்களால் துரத்தி துரத்தி தாக்கப்பட்டார். கொடூரமாகத் தாக்கப்பட்ட சையத் மஜாகீர் அலி, உதவிக்காக கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தாக்குதலுக்குள்ளான அலியின் குடும்பத்தினர், அவரை சந்திக்க அவசர விசா வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த நாளே இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்டியூ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலுக்கான முனைவர் படிப்பு படித்து வந்த சமீர் காமத் (23) என்ற இந்திய மாணவர், வாரன் கவுண்டி பகுதியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கிளெவ்லேண்ட் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் உமா சத்யசாய் கத்தே திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் கூறுகையில், உமா சத்யசாய் கத்தேவின் இறப்புக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவருடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர அனைத்து உதவிகளை செய்து தர தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்திய மாணவர் அல்லது இந்தியர் ஒருவர் மரணம் அடைவது இவரோடு சேர்த்து இது 10ஆவது சம்பவம் ஆகும். இந்த தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.