தொடர்ந்து சாதி ஒழிப்பு களத்தில் இயங்குவேன் என ஆணவப்படுகொலை மூலம் பாதிக்கப்பட்டஉடுமலை கவுசல்யா கூறியுள்ளார்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலககமான பெரியார் படிப்பகத்தில் மறுமணம் நடைபெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/saathi.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கெளசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன், காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.
திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் , விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் - கெளசல்யா பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/07291b1a-3438-4dbd-8e1f-a3661d7a85eb_0.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ம் தேதி உடுமலைப்பேட்டையில் பட்ட பகலில் , கெளசல்யாவின் பெற்றோர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை நிறுவி சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும், பெண்கள் ஒடுக்கப்படும் விஷயங்களிலும் செயற்பாட்டளாராக இருந்து வருகிறார் கெளசல்யா.சக்தி பறையிசையை பரவலாக்க நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/saaaaa.jpg)
பறை இசை முழங்க சக்தி மற்றும் அவரது குழுவினர் குழுவினருடன் பறையை இசைத்து ஆடியபடிஇந்த திருமண விழா முடிவு பெற்றது.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த உடுமலை கவுசல்யா பேசுகையில்,
நானும் சக்தியும் இணைந்து ஜாதி மறுப்பு ,ஜாதி ஒழிப்புக் களத்தில் தொடர்ந்து செயல்படுவோம். ஆணவ படுகொலையை எதிர்த்து தனிச்சட்டம் இயற்றும்வரை எனது போராட்டம் தொடரும். அதேபோல் சக்தியின் பயணமானது எங்கெல்லாம் பறையிசையைகொண்டுபோகும் முடியுமோ அந்த இடத்திற்கு கொண்டு போவது சக்தியின்நோக்கமாக இருக்கும் எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)