Skip to main content

தடம் புரண்டது உதகை மலை ரயில்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

 The Utkai Hill train derailed

 

உதகையில் குன்னூர் ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி தினசரி இரண்டு முறை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு உதகை ரயில் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட ரயில் 200 மீட்டர் தூரத்திற்கு சென்ற நிலையில் திடீரென மலை ரயிலின் கடைசி பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து வெளியேறி தடம் புரண்டது.

 

இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். இதனால் மலை ரயில் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் ரயிலில் திருமணம்; வைரலாகும் வீடியோ

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 Marriage on a Running Train; A viral video

 

அண்மையாகவே திருமணம் செய்த கையோடு தேர்வு எழுதுவது அல்லது போராட்ட நிகழ்வுகளுக்கு திருமணம் முடிந்த கையோடு செல்வது என சில புதுமண தம்பதிகள் எடுக்கும் அதிரடி முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாவதும், அந்த காட்சிகள் இணையவாசிகள் மத்தியில் ஆதரவுகளை பெறுவதும், எதிர்ப்புகளையும் பெறுவதும் நிகழ்ந்து வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் ஓடும் ரயிலில், பயணிகள் மத்தியில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிற்கு மாலையிட்டு, தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அசன்சோல் ரயிலில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியம் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார் மற்றும் மணல் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்கள் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

 

இந்த விபத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாகக் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்