
உதகையில் குன்னூர் ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி தினசரி இரண்டு முறை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு உதகை ரயில் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட ரயில் 200 மீட்டர் தூரத்திற்கு சென்ற நிலையில் திடீரென மலை ரயிலின் கடைசி பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து வெளியேறி தடம் புரண்டது.
இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். இதனால் மலை ரயில் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.