![Unveiling of the full statue of Director S.P.Jananathan (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/PIgylMacu2c3Ho-perkcyA04k6Uqa2rk7tH7W_5Rnl0/1640528345/sites/default/files/2021-12/z11.jpg)
![Unveiling of the full statue of Director S.P.Jananathan (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/0nXbxyfltYQIj5B0Vs-puHb72En-obXbCD_3Ash9uws/1640528345/sites/default/files/2021-12/z12.jpg)
![Unveiling of the full statue of Director S.P.Jananathan (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/LW1_1RsxSwr0qBEUd50z-bhCtsaAWee31gZjV6CM-Jc/1640528345/sites/default/files/2021-12/z13.jpg)
![Unveiling of the full statue of Director S.P.Jananathan (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/YZ5P7uBBT0F4LS6tavElP3OT0bx1ih1-hItfDlBE1QE/1640528345/sites/default/files/2021-12/z14.jpg)
![Unveiling of the full statue of Director S.P.Jananathan (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/4Q1ymIbl_EmcPFdV0sT8BFDTAPmPozyAwkzhaH8K-v4/1640528345/sites/default/files/2021-12/z16.jpg)
![Unveiling of the full statue of Director S.P.Jananathan (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/zLE6wRgIM4NRz5NS_BAeqIFJT4ow5YgCCLbRO4DUBy4/1640528345/sites/default/files/2021-12/z15.jpg)
![Unveiling of the full statue of Director S.P.Jananathan (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/h0OszCQPFtbY-QVvLDxJC3BYnbzR421eE_T5Ux7Rphw/1640528345/sites/default/files/2021-12/z17.jpg)
![Unveiling of the full statue of Director S.P.Jananathan (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/JkZR3xRQ-vEYGH88c-6INwQzWm6ivXPQvQB2laEqCu0/1640528345/sites/default/files/2021-12/z18.jpg)
மறைந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் முழு உருவச் சிலை மற்றும் படத்திறப்பு விழா அடையாற்றில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் எஸ்.பி.ஜனநாதனின் உருவப்படத்தை இந்திய விடுதலை போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு திறந்து வைத்து புகழ் வணக்க உரையாற்றினார்.
அவரது முழு உருவச் சிலையை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காணொளி வாயிலாகத் திறந்து வைத்து உரையாற்றினார். விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே,பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு சி.மகேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.