Skip to main content

முடியாத கஜா புயல் போராட்டம்... ஆலங்குடிக்கு வந்த 500 டன் அரிசி தரமற்ற ரேசன் அரிசியா?

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

கஜா புயலில் பாதிக்கப்பட்ட நெல்லில் அறைக்கப்பட்ட தரமில்லாத அரிசிகளை ஆலங்குடி குடோனில் இருப்பு வைக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதை நிறுத்தி தரமான அரிசிகளை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்க இயக்குநர் செங்கோடன் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

 

ration rice

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசி பழுப்பு நிறத்திலும், துர்நாற்றத்துடனும் உள்ளதாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

 

 

இந்தநிலையில் கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் சி.ஆர். அரிசி மிகவும் தரமற்றதாக உள்ளதாக கூட்டுறவு சங்க இயக்குநர் செங்கோடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் அரிசியை மாற்றி வழங்கவில்லை என்று ஆலங்குடி, புதுக்கோட்டையில் உள்ள உணவு துறை அதிகாரிகளுக்கு நேரில் புகார் மனு கொடுத்துள்ளார்.

 

 

இது குறித்து கூட்டுறவு சங்க இயக்குநர் செங்கோடன் கூறும் போது.. கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள சி.ஆர் அரிசி பழுப்பாகவும், துர்நாற்றத்துடனும் உள்ளது என்பதை நேரில் பார்த்து அதிகாரிகளிடம் கேட்டால் குடோனில் இருந்து அனுப்பும் அரிசி அப்படித்தான் உள்ளது என்றார்கள். அதனால் ஆலங்குடி குடோன் அதிகாரிகளை நேரில் சந்தித்து அரிசியை மாற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தேன்.

 

ration rice

 

அப்போது அதிகாரிகள் சொன்ன தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதாவது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி 3 குடோன்கள் உள்ளது. இதில் புதுக்கோட்டைம மற்றும் திருமயத்திற்கு சன்னரக அரிசி இறக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஆலங்குடி குடேனுக்கு கொண்டுவரப்பட்டுள்ள சுமார் 500 டன் அரிசியும் கஜா புயலின் போது மழையில் நனைந்து பாதிக்கப்பட்ட நெல்லி இருந்து அரைக்கப்பட்ட தரமற்ற அரிசி தான் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் அரிசி தரமில்லை என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனால் மாவட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உடனடியாக தரமற்ற அரிசிக்கு பதிலாக தரமான அரிசியை மாற்றி அனுப்ப கேட்டும் இன்னும் கொண்டுவரப்படவில்லை.

 

 

ஆனால் கொத்தமங்கலத்திற்கு உடனடியாக மாற்ற நல்ல அரிசி அனுப்புகிறோம் என்றார்கள். ஆனால் ஆலங்குடி குடோனில் வைக்கப்பட்டுள்ள 500 டன் தரமற்ற அரிசிகளையும் மாற்ற மக்களுக்கு வழங்க வேண்டும் இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மனுவில் குறிப்பிட்டதுடன் அதிகாரிகளிடமும் நேரடியாக கூறியுள்ளோம் என்றவர் மேலும் ஒரு வருடமாக ரேசன் கடைகளுக்கு உளுந்தம் பருப்பு அனுப்புவதில்லை. மீண்டும் உளுந்தம் பருப்பு அனுப்ப வேண்டும். 

 

 

ஆலங்குடி பகுதி மக்களை வஞ்சிக்க கஜா புயலில் பாதிக்கப்பட்ட போது ஆலங்குடி பகுதியில் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தியதால் தரமற்ற அரிசி அனுப்புகிறார்களா என்பது தெரியவில்லை உடனடியாக குடோனில் உள்ள தரமற்ற 500 டன் அரிசியை எடுத்துக் கொண்டு தரமான அரிசி வழங்கவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்