தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியபோதும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதிய கட்டுப்பாடுகள்தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று (24/04/2021) வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வர இருக்கிறது.
அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. சென்னை மாநகராட்சி உள்படமாநகராட்சிகள், நகராட்சிகளில்சலூன், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம். ஓட்டல்,டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமேஅனுமதி. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தால் இ-பதிவுகாட்டவேண்டும். வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை. தனியார், அரசுப் பேருந்துகளில் நின்றுகொண்டுபயணிக்க அனுமதியில்லை. இறுதி ஊர்வலங்களில் 25 பேரும், திருமண நிகழ்ச்சியில் 50 பேரும்மட்டும் கலந்துகொள்ளஅனுமதி. கோவில் குடமுழுக்கில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 50 சதவிகிதம் ஐ.டி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.
இந்தப் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 26 அதிகாலை 4 மணியிலிருந்து ஏப்ரல்30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரைநீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முழுமுடக்கம் என்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். முழுமுடக்கநேரத்தில் அநாவசியமாக வெளியில் சுற்றுவோரின்வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனக் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.