பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான நிதின் கட்கரி இன்று (13-09-24) தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ்நாடு நம்பர் ஒன்றாக உள்ளது. அமெரிக்காவில் உள்ளது போல் சாலை கட்டுமானத்தின் தரத்தை கொண்டு வருவோம். தஞ்சை - விக்கிரவாண்டி 4 வழிச்சாலை ரூ.4,730 கோடியில் 164 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 727 கி.மீ நீளத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடியில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்படுகிறது. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிலம் கையகம் செய்வதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். தஞ்சை - சேத்தியாதோப்பு சாலைப்பணிகள் 95% நிறைவு பெற்றுவிட்டது” என்று பேசினார்.