கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியம் கோடங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட எழுமாத்தூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரியைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியை ஆய்வு செய்வதற்காக மங்களூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தண்டபாணி கடந்த மூன்றாம் தேதி மாலை 3 மணி அளவில் எழுமாத்தூர் கிராமத்திற்கு வருகை தந்து, ஏரி தூர்வாரும் பணியைப் பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் பழனிவேல் ஆகிய இருவரும் ஆணையரிடம் சென்று நடைபெறும் பணி சரி இல்லை. பணியை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறி அவரை வழிமறித்துத் தகராறு செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மீது ஆணையர் தண்டபாணி ஆவினங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் குழந்தைவேல் பழனிவேல் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.