தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது . இந்நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் குடிநீரின்றி தவித்து வருவதை எளிதில் பார்க்க முடிகிறது . தமிழகத்தில் தலைநகராக விளங்கும் சென்னை மாநகரில் பொதுமக்கள் குடங்களுடன் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் . இதற்கு முழு காரணம் நிலத்தடி நீர் வளத்தை காக்கத் தவறியதே. ஏனெனில் தமிழகத்தில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது . அதற்கு காரணம் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஆழ்துளை கிணறு தோண்டுவது , நிலத்தடி நீர்வளத்துடன் ரசாயன நீர் கலப்பது என பல்வேறு சட்ட விரோத சம்பவங்கள் நடந்து வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசோ இது குறித்து கண்டுகொள்ளவில்லை. மேலும் தமிழகத்தில் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்கும் வகையில் 2001ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்த திட்டமான 'மழைநீர் சேமிப்பு' திட்டம் தற்போது கிடப்பில் உள்ளது . இதனாலும் நிலத்தடி நீர் வளம் குறைய ஓர் காரணம் ஆகும் . அதே போல் புதியதாக வீடு கட்டும் போது ' மழைநீர் சேகரிப்பு' திட்டம் இடம் பெற்றால் தான் அந்த வீட்டிற்கு கட்டிட அனுமதி தருவதாக தமிழக அரசு கூறி வருகிறது . ஆனால் சென்னையில் உள்ள அனைத்து அடுக்கு மாடி வீடுகளிலும் 'மழைநீர் சேகரிப்பு' திட்டம்' உள்ளதா? என்பதை தமிழக அரசு நிரூபிக்க தயாரா? நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள், பொது மக்கள் உட்பட பலர் தமிழக அரசை கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க பொது மக்கள் உட்பட அனைவரின் முயற்சியாலும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆழ்துளை கிணற்றாள் ஏற்படும் பாதிப்பு குறித்தும் , தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் , மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக சமூக வலை தளங்களிலும் , பொது இடங்களிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினால் தமிழக்தில் நிலத்தடி நீர் வளத்தை கட்டாயம் சேமிக்கலாம் மற்றும் நீர் வளத்தை பாதுக்காக்க முடியும் .அதனைத் தொடர்ந்து தற்போது கோடை காலம் ஆனால் புயல் உருவாகி கனமழை பெய்து வருகிறது . இதில் நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்து விடுவதும் , கோடைக்காலத்தில் புயல் உருவாகி மழை பெய்து வருவதையும் உலகளவில் ஒப்பிடும் போது இந்திய நாட்டில் பருவநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதை அனைவரும் எளிதாக காண முடிகிறது.