/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mksa4322_0.jpg)
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (வயது 73) உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள்ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மேன்மை தங்கிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.
இன்றைக்கு உள்ள அமீரகத்தைக் கட்டியமைப்பதில் அவரது பெரும் பங்களிப்புகளும்; 2009 ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது துபாயை மீட்டெடுக்க அவர் செய்த முக்கியமான உதவியும் என்றென்றும் நினைவுக்கூரப்படும்.
மறைந்த தலைவருக்கு எனது அஞ்சலியையும் அவரது குடும்பத்தினர் மற்றும் அமீரக மக்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)