
மதுரை திருப்பரங்குன்றம் அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட் மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் இன்று மதியம் 2 மணி அளவில் சாலையிலிருந்த பேரிகார்ட் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சம்பகுளத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற அந்த இளைஞரின் இடது கண் காயமடைந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.