/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fhdfh_0.jpg)
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் கல்விப்பணியைப் போற்றும் விதமாக நாடு முழுவதிலும் இருந்து சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 47 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர்இடம்பிடித்துள்ளனர். விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப் மற்றும் சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைசரஸ்வதி ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)