Skip to main content

கடத்திவரப்பட்ட காரைக்கால் மதுபாட்டில்களில் தமிழக டாஸ்மாக் ஸ்டிக்கர்; அதிர்ச்சியடைந்த போலீசார்!

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

தமிழக அரசின்  ஸ்டிக்கரை ஒட்டி நூதனமுறையில் கடத்தப்பட்ட  6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5760 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் இடுபட்ட  இரண்டு பேரை விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர் நாகை தனிபிரிவு போலீசார் .

 

tasmak

 

நாகை அருகே உள்ள தமிழக எல்லையான வாஞ்சூரில்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையிலான தனிபிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த மீன் வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வண்டியில் பால்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மீன்வண்டியில் பால்பெட்டி எதற்கு என சந்தேகமடைந்த காக்கிகள்,  பெட்டிகளை திறக்க சொன்னார்கள் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் திடீரென்று மின்னல் வேகத்தில் வாகனத்தை  வேகமாக  முறுக்கி தப்பி சென்றார். அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அருகில் உள்ள நாகூர் ரவுண்டானாவில் இருந்த போலீஸார்  அந்த வாகனத்தை துரத்தி சென்று கிழக்கு கடற்கரை சாலையில் மடக்கி பிடித்தனர். 

 

tasmak

 

அங்கிருந்து தப்பி ஓட முயன்ற  ஓட்டுநரையும் கூடவந்த  மற்றொரு நபரையும் பிடித்துக்கொண்டு, வண்டியை திறந்துபார்த்து அதிரந்தனர். அந்த வண்டியில் பால் ஏற்றுவதுபோல சரக்கு பெட்டிகளை மறைத்து வைத்து மதுபாட்டிகளை கடத்தி வந்துள்ளனர். 120 பெட்டிகளில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5760 புதுச்சேரி மாநில மதுபாட்டிகள் இருந்ததை கைப்பற்றினர். அதோடு அந்த மதுபாட்டில்களில் தமிழக அரசின் டாஸ்மாக் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைக்கண்டு அதிர்சியடைந்தனர்.

 

பின்னர் சரக்கு கடத்திவந்த வாகனத்தையும்,  கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்கால் கல்லறைப்பேட்டை பகுதியை சேர்ந்த பழனிராஜா, பூவம் பகுதியை சேர்ந்த எட்வர்ட்ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரனையில் ஈடுபட்டனர். 

 

அதில்" . மதுபாட்டில்கள் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு கடத்தி செல்லவதாகவும். கடத்தப்பட்ட மதுபாட்டிகளில் தமிழக டாஸ்மாக்கடை சரக்குகளில் உள்ள அதே ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்,  அந்த பாட்டில்கள் உண்மையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருந்ததவையா? அல்லது அங்குள்ள அதிகாரிகளின் துணையோடு வெளியில் விற்பனை செய்வதற்காக ஸ்டிக்கர்களை வாங்கிச்சென்று ஒட்டி கடத்தியுள்ளனரா என்கிற  கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தகராறு செய்த மனைவி; திருமணம் செய்து வைத்த புரோக்கரை தாக்கிய கணவர்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
 husband  beaten broker who had married him because his wife had a dispute

விழுப்புரம் மாவட்டம் வடவாம்பழத்தைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் சக்திவேல். இவர் கூலி தொழில் பார்த்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்வருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சக்திவேல் - ஜெகதீஸ்வரி இருவருக்கும் அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்ற கல்யாண புரேக்கர் திருமணம் செய்துவைத்திருக்கிறார். 

இந்த நிலையில் கணவன் சக்திவேலுக்கும், மனைவி ஜெகதீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோன்று சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிக் கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி ஜெகதீஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இருவருக்கும் வரன் பார்த்து திருமணம் செய்துவைத்த புரோக்கர் பெருமாளை தாக்கியுள்ளார். அரசமங்கலம் ரேஷன் கடையில் நின்றுக்கொண்டிருந்த அவரை சக்திவேல், “நீ தான எனக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வச்ச, இப்போ பாரு என் மனைவி அடிக்கடி சண்டை போடுறா..” என்று ஆபாச வார்த்தையில் புரோக்கர் பெருமாளை திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புரோக்கர் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

ஜாஃபர் சாதிக் வழக்கு; துணை நடிகருக்கு இ.டி சம்மன்   

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
N

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்து மூன்று நாட்கள் காவல் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கின் பினாமி என்று கூறப்பட்ட ஆவடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் எட்டு மணி நேரமாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும், துணை நடிகருமான மைதீன் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜாஃபர் சாதிக் தயாரித்து அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தில் மைதீன் துணை நடிகராக பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று ஜாஃபர் சாதிக்கின் சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.