Two people were arrested for storing

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராளகொத்தூர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியைசேர்ந்த கோவிந்தசாமி மஞ்சுளா தம்பதியினரின் பசுமாடு ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது. அப்போது, அங்கே நிலத்தில் ஏதோ காய் எனக் கடித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாட்டின் வாய் மற்றும் தாடை பகுதி கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது.

Advertisment

இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குப்புராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (24) மற்றும் அங்கியாபள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும்கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வனவிலங்குகளை வேட்டையாட விவசாய நிலங்களில் ஆங்காங்கே நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதும். அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுமாட்டின்வாய் மற்றும் தாடை கிழிந்ததும் தெரியவந்தது.

Advertisment

இவர்கள் விவசாய நிலத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.