Skip to main content

அரசு அலுவலக வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Two people passed away in a government office vehicle collision!

திருச்சியை அடுத்த நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் திருச்சி மாவட்ட வரவேற்பு வட்டாட்சியரின் வாகன (ஜீப்) ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று(26.5.2024) காலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மணிகண்டம் ஒன்றிய அலுவலகம் அருகே அரசு வாகனத்தில் சென்றுள்ளார்.

திடீரென அவரது கட்டுப்பாட்டையிழந்த வாகனம் தறிகெட்டு ஓடி, சாலையின் மையத் தடுப்பில் மோதி எதிர்த்திசை சாலையில் சென்றுள்ளது. அப்போது அந்தச் சாலையில் இருசக்கர வாகனங்களில் வந்த இருவரது வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனங்களில் வந்த இருவரும் பலத்தகாயமடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவர் மற்றும் புஷ்பராஜ் உள்ளிட்ட மூவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவரும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மற்றவரும் என இருவரும் உயிரிழந்தனர். சிகிச்சைக்கு வந்த ஓட்டுநர் புஷ்பராஜ் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மணிகண்டம் பகவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விவசாய தொழிலாளி தனபால் (40), மணிகண்டம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோயில் பூசாரி மணி (60) ஆகியோர் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தனபாலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மணியும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மணிகண்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்

சார்ந்த செய்திகள்