Two lose their live in poison gas attack - Tragedy struck while cleaning dye waste tank

திருப்பூரில் சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள கரைப்புதூர் பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது விஷவாயு தாக்கி நான்கு பேரும் மயக்கம் அடைந்தனர். மீட்கப்பட்ட நான்கு பேரும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சுண்டமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் வேணுகோபால் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற இருவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.