Skip to main content

விஜிபி தீம் பார்கில் இருவருக்கு பாலியல் தொல்லை; ஊழியர் கைது  

Published on 21/01/2025 | Edited on 21/01/2025
Two harassed at VGP theme park; Employee arrested

சென்னை அடுத்துள்ள விஜிபி தீம் பார்கில் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தீம் பார்க் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் விஜிபி தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். கடந்த 17ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த  பெண் ஒருவர் தன்னுடைய 19 மற்றும் 16 வயது இரண்டு மகள்களுடன் தீம் பார்க் சென்றுள்ளார். அப்பொழுது நீர் சறுக்கு பகுதியில் மூத்த மகளும் இளைய மகளும் சறுக்கிய பொழுது அங்கு பணியில் இருந்து ஊழியர் ஒருவர் மகள்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக விஜிபி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண்களின் தாய் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விஜிபி ஊழியரான சுரேந்திரன் என்பவரை கைது செய்துள்ளனர். நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்ட நிலையில் சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக விஜிபி நிர்வாகத்திடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்