Skip to main content

“அம்மாவ பாரு பாப்பா உன்ன வீடியோ எடுக்குறாங்க பாரு பாப்பா....”- மருந்தில்லாததால் உயிரிழந்த குழந்தை

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

twins passed away in hospital; mom who cry


திருபத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண். இவருக்கும் இவரது மனைவிக்கும் நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக கூறி கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

 

எனினும் மூன்று தினங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை இறந்த நிலையில் மற்றொரு பெண் குழந்தைக்கு சிகிச்சை தொடர்ந்து வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இந்த விவரத்தை அறிந்த செய்தியாளர்கள் செய்தியை சேகரிக்க அங்கு சென்றனர். அப்போது இறந்த அக்குழந்தையின் தாய், “பாப்பா அம்மாவ பாரு பாப்பா. உன்ன வீடியோ எடுக்குறாங்க பாரு பாப்பா” என்று கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

 

குழந்தைகளிம் தந்தை கூறுகையில், “குழந்தைங்க நல்லா இருக்குதுனு சொல்லியே ஒரு மாசமா இங்கயே இருந்ததுங்க.  அப்பப்போ ஒரு ஊசி 1000 ரூபாய்க்கு வாங்கி கொடுத்தும் காப்பாத்த முடியல. முப்பதாயிரத்துக்கு ஊசி வாங்கி கொடுத்தும் ரெண்டு குழந்தைங்களும் இறந்துடுச்சு. இன்னைக்கு காலைல 10 மணிக்கு ஒரு குழந்த நல்லா இருக்குனு டாக்டர் வந்து சொன்னாரு. சாயந்தரம் 5 மணிக்கு குழந்த இறந்துடுச்சுனு என் மனைவி கிட்ட சொல்லி இருக்காங்க. இதுக்கு அரசு ஒரு நடவடிக்கை எடுக்கனும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.