Skip to main content

10 ஆண்டுகளாக அடைபட்டிருந்த தொலைக்காட்சி பெட்டிகளும், மூடப்பட்டிருந்த சமுதாய நலக்கூடமும்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

TV sets that had been stuffed for 10 years and a closed social welfare center!

 

கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 'குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும்' என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

 

அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கடலூர் நகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக 3,139 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்டுவரப்பட்டு செம்மண்டலம் குண்டு சாலையில் உள்ள பல்நோக்கு சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அப்போது 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக அந்த 3,139 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

 

2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011 முதல் 2016 வரையிலும், 2016 முதல் 2021 ஆண்டு வரையிலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடைபெற்றது. இதனால் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கடந்த 10 ஆண்டுகளாகச் சமுதாய நலக் கூடத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. தற்போது தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், "சமுதாய நலக்கூடத்தினை திறந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை விடுபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். பூட்டியே கிடக்கும் சமுதாய நலக்கூடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்" என்று கோரிக்கைகள் எழுந்தன.

 

TV sets that had been stuffed for 10 years and a closed social welfare center!

 

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் சமுதாய நலக் கூடத்தில் இருந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டது. அதில் நல்ல நிலையில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளை அரசு அலுவலகங்கள் போன்ற பிற பயன்பாட்டிற்கும் பழுதடைந்தவற்றைச் சரிசெய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று வட்டாட்சியர் பலராமன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடலூர் செம்மண்டலம் சமுதாய நலக் கூடத்திலிருந்த 3,139 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை ஊழியர்கள்  வாகனங்கள் மூலம் ஏற்றி கடலூர் டவுன்ஹாலில் உள்ள சிறிய அறைக்கு மாற்றினர். பழுதடைந்த தொலைக்காட்சிகளை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து சமுதாய நலக் கூடத்தினை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக பூட்டி இருந்ததால் அந்த கட்டடம் தற்போது பழுதாகி உள்ளது. சமுதாய நலக் கூடத்தில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் உடைந்து காணப்படுகின்றன. அதைச் சுற்றிலும் முள் செடிகள், கொடிகள் படர்ந்துள்ளன. இவைகளை அகற்றி, கட்டிடங்களைப் புதுப்பிக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

 

இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள ரெட்டியார்சத்திரம் கட்டிடம், கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மேலும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும்,  மாவட்டம் முழுவதும் 7,619 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகள் அனைத்தையும் சீர்செய்து விடுபட்ட நபர்களுக்கு வழங்கவும்,  அல்லது அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவைகளுக்கு உபயோகப்படுத்தவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.