Published on 13/05/2019 | Edited on 13/05/2019
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த சாமிநாதன் என்பவர் தனது இருச்சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருக்கும் போது ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள புதுக்குடி அருகே வந்தபோது எதிரே வந்த வேன் மோதியதில் இருச்சக்கர வாகனம் தீப்பிடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார் மற்றொருவரும் இந்த விபத்தில் பலியாயானார்.

இது குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் திருநெல்வேலி, திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.