
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தழுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நித்யா. இவரது கணவர் வெற்றிச்செல்வன். இதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். பல வருடங்கள் கடந்தும் வெற்றிச்செல்வன் கடனை திருப்பி கொடுக்காமல் குணசேகரனை அலைக்கழித்து வந்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த குணசேகரன் வெற்றிச்செல்வன் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த வெற்றிச்செல்வன், குணசேகரனை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து குணசேகரனை வெட்ட முயன்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திமுக கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)