trichy very old popular theatre sealed

திருச்சிக்கு மலைக்கோட்டை கோவில் பெருமை சேர்ப்பது போல், 'ராமகிருஷ்ணா', 'முருகன்' போன்ற சினிமா டாக்கீஸ்கள் அடையாளமாக இருந்தன. தொழில் முடக்கம் வருவாய் இழப்பு போன்ற காரணங்களால் பல தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. 50 ஆண்டுகளுக்கும் மேலான ராமகிருஷ்ணா தியேட்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.

Advertisment

அதேபோல், பல தியேட்டர்கள் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள், வரி பாக்கி நிலுவை வைத்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன், 9 கோடி ரூபாய் (குத்தகை) வாடகை பாக்கி வைத்திருந்த நூறு ஆண்டுகள் பழமையான யூனியன் கிளப் கட்டிடம் இடிக்கப்பட்டது. அந்த வரிசையில், கீழப்புலிவார் ரோட்டில் உள்ள முருகன் டாக்கீஸை தற்போது திருச்சி மாநகராட்சியின் மேயர், மறைந்த புனிதவல்லி பழனியாண்டியின் மகன், சுரேஷ் மற்றும் நண்பர்கள் கூட்டாகத் திரையரங்கை நிர்வகித்து வந்துள்ளனர்.

Advertisment

trichy very old popular theatre sealed

99 வருடம் (லீஸ்) குத்தகை, வருவாய்த் துறையிடம் அனுமதிபெற்று தியேட்டர் இயங்கிவந்தது. முதலில் மாதம் 12,000 ரூபாய் என (குத்தகை) வாடகை பணம் நியமிக்கப்பட்டது. 2009 வரை வாடகை நிலுவையில் இல்லாமல் அனைத்தும் கட்டப்பட்டதாக தியேட்டர் நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர். தற்போது வருவாய்த்துறையினர் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி எனத் தெரிவித்து திருச்சி கிழக்கு தாசில்தார் கமலக் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் முருகன் டாக்கீஸ்க்கு சீல் வைத்துச் சென்றுள்ளனர்.