Skip to main content

ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரிக் கரையில் தூய்மைப் பணி; தன்னார்வலர்கள் ஆர்வம்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

trichy srirangam amma mandapam kaveri karai cleaning work volunteer involved 

 

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரிக் கரையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடன் இணைந்து காவிரி நதி தூய்மைப் பணியினை மாகாவேரி தன்னார்வக் குழு பல்வேறு சமூக சேவை அறக்கட்டளையுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் காவிரிக் கரையோரத்தில் அமைந்துள்ள அம்மா மண்டப காவிரிக் கரை பராமரிப்பின்மையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். காவிரி நதி புண்ணிய நதியாக கருதப்படுவதால் பக்தர்களின் நிலையான வருகையைப் பெறுகிறது. மேலும் முன்னோர்களுக்கு செய்யும் பூஜைகளில் ஈடுபடுபவர்கள் பூ, மாலைகள், துணிகள், பழங்கள், இலைகள் மற்றும் பிற பொருட்களை ஆற்றில் விடுவது வழக்கமாக உள்ளது. பல பக்தர்கள் மாலைகள் மற்றும் துணிகளை தவறாமல் ஆற்றில் விடுகிறார்கள். முக்கியமாக ஆடைகள், கரையோரத்தில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் ஆற்றில் குளிக்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

 

இதனைக் கருத்தில் கொண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் மாகாவேரி தன்னார்வக் குழு, திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேஷன், திருச்சி எம்.ஜி.ஆர். சாலை நடைபாதை அமைப்பு, ஆயிர வைசிய மஞ்சள் புதூர் மகாஜன சபை, சக்தி சங்கம், சிவசக்தி அகாடமி, சின்மயா பள்ளி மாணவ, மாணவிகள், ஆரிய வைசிய பேரி செட்டியார் சமூகத்தினர், ஆரிய வைசிய சமூகம், ஜில்லா நாயுடு மகாஜன சங்கம், சௌராஷ்ட்ரா சமூகத்தினர், யாதவ சமூகத்தினர், விஸ்வகர்மா சமூகத்தினர், ராதாகிருஷ்ண மாதர் பஜனை மண்டலினர், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை உட்பட பல்வேறு சமூக சேவை அமைப்பு மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து திருச்சி காவேரி அம்மா மண்டப பகுதிகளையும் ஆற்றில் இருந்த மாலைகள், துணிகள், பானைகளை எடுத்து தூய்மைப்படுத்தினர்.

 

முன்னதாக சிவசக்தி அகாடமி குழுவினர் காவேரி புனிதத்தை எடுத்துக் கூறும் பாடலுக்கு நடனம் ஆடினர். பொதுமக்களிடம் காவேரி அம்மா மண்டப படித்துறையினை சுத்தமாக பராமரிக்க பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர். காவிரி தூய்மைப் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் பத்ரி நாராயணன், பத்ம கிருஷ்ணன் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி ஒன்றாவது மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், மாமன்ற உறுப்பினர்கள் சாதிக் பாஷா, எல்ஐசி சங்கர் தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தனர்.

 

இணை ஒருங்கிணைப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், கோபிநாத், கோகுல்தாஸ், ரங்க பிரசாத், சரவணன், கார்த்திகேயன், ராஜேஷ், அன்புச்செல்வன், ரவிச்சந்திரன், சரவணன், வெங்கடகிருஷ்ணன் விக்னேஸ்வரன், சந்தன கிருஷ்ணன், கண்ணன், கார்த்திக், கிருஷ்ணகுமார், பாலமுருகன், கோபி, நந்தகுமார், வெங்கடேசன், சேக்கிழார், செந்தில், எம்ஜிஆர் நடைபாதை அமைப்பு தலைவர் ஸ்ரீனிவாசன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், முத்து மணிகண்ட கார்த்திகேயன் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நாய் கடித்ததில் படுகாயம்; 4 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

4-year-old girl was admitted to hospital after being bitten by dogs near Manaparai

 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீ.பூசாரிபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வடிவேல் என்பவரது 4 வயது சிறுமி, தன்னுடைய வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் சிறுமியைக் கடித்துக் குதறவே சிறுமி‌ சப்தம் போட்டுள்ளார். உடனே குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு பார்த்தபோது வலது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 

 

இதனையடுத்து உடனடியாகச் சிறுமியை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதும் பொதுமக்களையும்‌ கோழி மற்றும் கால்நடைகளையும் கடித்து மக்கள் பாதிக்கப்படும் சம்பவமும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை இனியும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இதேபோல் சம்பவத்தால் பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

2017ல் நடந்த பயங்கர கொலை! - தீர்ப்பளித்த நீதிமன்றம்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Trichy court sentence for accused

 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த 2017ம் ஆண்டு தாய், மகனை அடித்து இரட்டைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.13,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது மனைவி தனபாபு மற்றும் மகன் சத்தியமூர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே ஊரில் வசித்து வந்த தனபாபுவின் அண்ணன் ராமசாமி பஞ்சாயத்து தலைவராக இருக்கும்போது, தேர்தல் செலவுக்காக தனபாபு ஒரு லட்சம் பணம் வெளியில் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் இவர்களைக் கொலை செய்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்துவிட்டார்.

 

இதனால், தனபாபு மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் ராமசாமி மகன் ராஜகோபால் என்பவரிடம் கொடுத்த பணத்தைக் கேட்டபோது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி அதிகாலை சுமார் 3.30 மணிக்கு ராஜகோபால் என்பவர், சத்தியமூர்த்தி வீட்டுக்குச் சென்று ஒரு கனமான ஆயுதத்தால், தூங்கிக் கொண்டிருந்த தனபாபு மற்றும் சத்தியமூர்த்தி தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.

 

பின்பு அவர்களை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து வீட்டு வாசலில் உள்ள மண் ரோட்டில் போட்டுவிட்டு தனது டாக்டரை அவர்கள் மீது ஏற்றி விபத்தில் இறந்ததுபோல் செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

பின்னர் இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி செல்வ முத்துக்குமாரி தீர்ப்பளித்தார். அதில் தாய், மகன் என இரட்டைக் கொலை செய்த ராஜகோபாலுக்கு இரண்டு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 13000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்