திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரிக் கரையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடன் இணைந்து காவிரி நதி தூய்மைப் பணியினை மாகாவேரி தன்னார்வக் குழு பல்வேறு சமூக சேவை அறக்கட்டளையுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் காவிரிக் கரையோரத்தில் அமைந்துள்ள அம்மா மண்டப காவிரிக் கரை பராமரிப்பின்மையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். காவிரி நதி புண்ணிய நதியாக கருதப்படுவதால் பக்தர்களின் நிலையான வருகையைப் பெறுகிறது. மேலும் முன்னோர்களுக்கு செய்யும் பூஜைகளில் ஈடுபடுபவர்கள் பூ, மாலைகள், துணிகள், பழங்கள், இலைகள் மற்றும் பிற பொருட்களை ஆற்றில் விடுவது வழக்கமாக உள்ளது. பல பக்தர்கள் மாலைகள் மற்றும் துணிகளை தவறாமல் ஆற்றில் விடுகிறார்கள். முக்கியமாக ஆடைகள், கரையோரத்தில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் ஆற்றில் குளிக்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் மாகாவேரி தன்னார்வக் குழு, திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேஷன், திருச்சி எம்.ஜி.ஆர். சாலை நடைபாதை அமைப்பு, ஆயிர வைசிய மஞ்சள் புதூர் மகாஜன சபை, சக்தி சங்கம், சிவசக்தி அகாடமி, சின்மயா பள்ளி மாணவ, மாணவிகள், ஆரிய வைசிய பேரி செட்டியார் சமூகத்தினர், ஆரிய வைசிய சமூகம், ஜில்லா நாயுடு மகாஜன சங்கம், சௌராஷ்ட்ரா சமூகத்தினர், யாதவ சமூகத்தினர், விஸ்வகர்மா சமூகத்தினர், ராதாகிருஷ்ண மாதர் பஜனை மண்டலினர், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை உட்பட பல்வேறு சமூக சேவை அமைப்பு மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து திருச்சி காவேரி அம்மா மண்டப பகுதிகளையும் ஆற்றில் இருந்த மாலைகள், துணிகள், பானைகளை எடுத்து தூய்மைப்படுத்தினர்.
முன்னதாக சிவசக்தி அகாடமி குழுவினர் காவேரி புனிதத்தை எடுத்துக் கூறும் பாடலுக்கு நடனம் ஆடினர். பொதுமக்களிடம் காவேரி அம்மா மண்டப படித்துறையினை சுத்தமாக பராமரிக்க பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர். காவிரி தூய்மைப் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் பத்ரி நாராயணன், பத்ம கிருஷ்ணன் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி ஒன்றாவது மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், மாமன்ற உறுப்பினர்கள் சாதிக் பாஷா, எல்ஐசி சங்கர் தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தனர்.
இணை ஒருங்கிணைப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், கோபிநாத், கோகுல்தாஸ், ரங்க பிரசாத், சரவணன், கார்த்திகேயன், ராஜேஷ், அன்புச்செல்வன், ரவிச்சந்திரன், சரவணன், வெங்கடகிருஷ்ணன் விக்னேஸ்வரன், சந்தன கிருஷ்ணன், கண்ணன், கார்த்திக், கிருஷ்ணகுமார், பாலமுருகன், கோபி, நந்தகுமார், வெங்கடேசன், சேக்கிழார், செந்தில், எம்ஜிஆர் நடைபாதை அமைப்பு தலைவர் ஸ்ரீனிவாசன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், முத்து மணிகண்ட கார்த்திகேயன் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.