திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சீராத்தோப்பு சுரேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பிரபல கொள்ளையன் முருகனின் அக்கா மகன் சுரேஷ் சரணடைந்தார்.

Advertisment

trichy lalitha jewellery thief surrender at thiruvannamalai court

அக்டோபர்- 1 ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுவற்றை துளையிட்டு ரூபாய் 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருவாரூர் அருகே நகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ், மணிகண்டனை காவல்துறையினர் துரத்தி சென்று பிடிக்க முயன்றன. ஆனால் சுரேஷ் தப்பிய நிலையில், மணிகண்டன் காவல்துறையிடம் சிக்கினார். சுரேஷை காவல்துறை தீவிரமாக தேடி வந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதை அடுத்து திருச்சியில் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான தனிப்படை பிரிவு செங்கம் நீதிமன்றத்திற்கு விரைந்து சென்றனர்.

Advertisment

alt="trichy lalitha jewellery thief surrender at thiruvannamalai court " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="de069329-1a28-4e32-bfbd-0833c679569e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_48.jpg" />