
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து வைத்து எடுத்து வந்த 8 லட்சத்து 65 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்புள்ள 140 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.