Skip to main content

500 ஆண்டு பழைமையான அரச மரத்தை வெட்டிய திருச்சி மாநகராட்சி! தடுத்த இளைஞர்கள்..

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

மரம் நம்முடைய சமூக வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மரம். அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சீனா வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரச மரத்தை வெட்டில் நம் வம்சம் தழைக்காது என்று முன்னோர் சொல்லுவார்கள். அதனால் அரசமரத்தை கடவுளாக கூட பல இடங்களில் வணங்குகிறார்கள். 

 

 

 

திருச்சியில் 500 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான அரசமரத்தை திருச்சியை ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் வெட்டி வீழ்த்தியதை தண்ணீர் இயக்கத்தை சேர்ந்தவர் தடுத்தி நிறுத்தியிருக்கிறார். வெட்ட யார் அனுமதி கொடுத்தார்கள் என்கிற கேள்வி விடை தெரியாமல் மர்மாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது..

500 ஆண்டு கால அரச மரம் வெட்டியதை தடுத்து நிறுத்திய தண்ணீர் இயக்கத்தை சேர்ந்த வினோத்திடம் பேசினோம்…

சார்.. கே.கே.நகர் பகுதியில் லிங்கநகரில் மிகப்பெரிய அரசமரம் இது எப்படியும் 500 ஆண்டுகளுக்கு மேலாக தான் இருக்கும். மரத்தை சுற்றி கீழே இறங்கியுள்ள இந்த கிளைகளே மரத்திற்கு இன்னோரு மரமாக வளர்ந்து நிற்கிறது. பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். இதை இன்று மதியம் இதன் அடிப்பகுதியை வெட்டி எடுத்து செல்வதை பார்த்தவுடன் எனக்கு பகீர் என்று இருந்தது.

 

 

 

உடனே மரம் வெட்டுவதை நிறுத்துங்கள் என்று சொன்னால் எங்க ஏரியா JE தான் வெட்ட சொன்னார் அவரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லி வெட்ட ஆரம்பித்தார். உடனே வெட்டுவதை நிறுத்துங்கள் எனறு கடுமையாக சொன்ன பிறகு நிறுத்தி JEக்கு போன் பண்ணி கொடுத்தார் அவரிடம் பேசினோம் அவரிடம் யார் உங்களுக்கு வெட்ட அனுமதி கொடுத்தாங்க என்று கேட்டவுடன் கமிஷனர் தான் அனுமதி கொடுத்தார் என்று சொல்லவும்.. நீங்க இந்த மரத்தை வெட்டுவதை நிறுத்த வில்லை என்றால் இங்கிருந்து எந்த வண்டியும் எடுத்து போக முடியாது என்று சொன்னவுடன் அவரை இணைப்பை துண்டித்து விட்டார். 

 

நாங்க இங்கிருந்து மரங்களை ஏற்றக்கூடாது என்ற சொன்னவுடன் அந்த மரம் ஏற்ற வந்தவரும்.. கிளம்பிவிட்டார்கள். சம்பவ இடத்திற்கு வரேன்று என்று சொன்ன JE யும் இது வரை வரவில்லை. இனியும் இந்த மரத்தை வெட்டுவதை அனுமதிக்க மாட்டோம். தேசிய பறவை மயிலை கொன்றால் சிறை தண்டனை என்கிறர்கள் தேசிய மரமான அரசமரத்தை வெட்டி இந்த அதிகாரிக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று ஆவேசமாக பேசினார்..

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆணாக மாறிய பெண் ஐ.ஆர்,எஸ் அதிகாரி; வரலாற்றில் இதுவே முதல்முறை!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Male-turned-female IRS officer in hyderabad

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அனுசுயா (35) என்ற பெண். இவர் மத்திய சுங்க கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக (ஐ.ஆர்.எஸ்) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டில் சென்னையில் உதவி ஆணையராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2018இல் துணை ஆணையர் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற இவர், கடந்த ஜனவரி 2023 முதல், தெலங்கானாவின் ஹைதராபாத்தில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

பெண் ஐ.ஆர்.எஸ் அதிகாரியான இவர், பெண்ணிலிருந்து ஆணாக மாற வேண்டும் என்றும், அதனால் அரசாங்க ஆவணங்களில் தனது பெயரை மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்தார். மேலும், தனது பெயரை ‘எம்.அனுகதிர் சூர்யா’ என்று மாற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த நிலையில், அவரது வேண்டுகோளைப் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது எம்.அனுசுயா என்பதற்குப் பதிலாக இனிமேல் எம்.அனுகதிர் சூர்யா என்று குறிப்பிடுவார் என்றும், அவர் ஆணாக கருதப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு பணி வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. 

Next Story

வீடு, கார்...எல்லை மீறிய பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி; உயர் அதிகாரிகளுக்கு பறந்த புகார்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
woman IAS officer who crossed the line in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர். இவர் உதவி ஆட்சியராக சேருவதற்கு முன்பு தனக்கென தனி அலுவலகம், கார் மற்றும் வீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. தான் வைத்த கோரிக்கையை ஏற்பாடு செய்யும்படி உயர் அதிகாரிகளிடம் நச்சரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, பூஜாவுக்கு சொந்த அறை வழங்கப்பட்டது. ஆனால், அந்த அறையில் கழிவறை இல்லாததால், அதை நிராகரித்துள்ளார். இதையடுத்து புனே கூடுதல் ஆட்சியர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறைக்கு வெளியே இருந்த கூடுதல் ஆட்சியரின் பெயர் பலகையை தூக்கிவிட்டு, பூஜா கேட்கர் தனது பெயர் பலகையை மாற்றி அந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் ஒப்பந்தக்காரர் ஒருவர் கொடுத்த விலை உயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்துக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. .

பூஜா கேட்கரின் எல்லை மீறிய செயல்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றனர். தொடர் புகார்கள் எழுந்ததால், பூஜா கேட்கர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையில், பூஜா கேட்கர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பர் சேர்ந்தவர் எனக் கூறியும், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி எனப் போலி சான்றிதழ் வழங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.